×

போலீஸ் ஸ்டேஷன்களில் மேயர் திடீர் ஆய்வு

சிவகாசி: சிவகாசி போலீஸ் ஸ்டேஷன்களில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேற்று மாலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். சிவகாசி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் பல்வேறு தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகிறது. புதிய சாலை வசதிகள் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகளும் மாணவ மாணவிகளும் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதால் நகரில் செயற்கையான முறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதற்காக நகரில் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமித்து போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க தேவையான ஏற்பாடுகளை செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், நேற்று சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன், திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன், சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய இடங்களில் நேரில் சென்று அங்குள்ள போலீஸ் அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து மாநகரப் பகுதியில் குற்ற சம்பவங்களை குறைப்பது குறித்தும், போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

The post போலீஸ் ஸ்டேஷன்களில் மேயர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sivakasi Municipal Corporation ,Mayor ,Sangeeta Inpam ,Sivakasi Corporation ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!